• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரின் தென்பகுதியில் வருமானம் ஈட்டாத நீர் விநியோகத்தை குறைக்கும் பொருட்டு முறைமைகளை புனரமைக்கும் ஒப்பந்தம்
- கொழும்பு நகரத்தினுள்ளும் அதன் சுற்றுப் பிரதேசத்திலும் குழாய் நீர் கசிவு மற்றும் கட்டணம் செலுத்தாது நீர் பெற்றுக் கொள்தல் என்பவற்றை குறைக்கும் நோக்கில் கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மேற்கு பிரதேசங்களில் நீர்வழங்கல் சேவையை விருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ ஊக்குவிப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் இலக்கம் கருத்திட்டத்தின் புனரமைப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.