• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலி இராச்சியத்தில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் இராணுவ படையணிக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கையானது மாலி இராச்சியத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு இராணுவ படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கின்றதோடு, இந்த படையணிக்குத் தேவையான மிதி வெடிகளை அகற்றும் மற்றும் வெடிக்கும் பொருட்களை செயலிழக்கச் செய்யும் உபகரணங்களை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.