• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வழக்கு நடவடிக்கைகளில் காணப்படும் தாமதங்களை குறைக்கும் பொருட்டு பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கைமுறைக்கு ஏற்பாடு செய்தல்
- பொதுமக்கள் வழக்கு தீர்ப்பு தாமதம் அடைவதன் காரணமாக பாரிய இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்வ தற்காக காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தாலும் பாரிய எண்ணிக்கையில் வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக "பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கை முறையினை" அறிமுகப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அதன் சார்பில் ஏற்பாடுகளை செய்து சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ளதும் சட்டமா அதிபரினால் இசைவாக்கம் வழங்கப் பட்டுள்ளதுமான குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.