• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பனிகள் பதிவாளர் அதிபதி திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துதல்
- 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்தி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள 2016‑10‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 1990/12 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.