• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத தொழிற்பாட்டு பணிகளை வினைத்திறனுடனும் பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்காக "உலகளாவிய அமைவிட முறைமை" தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
- புகையிரத தொழிற்பாட்டு பணிகளை வினைத்திறனுடனும் பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை புகையிரத சேவைக்கு நவீன தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை புகையிரத சேவைக்கும் பொதுமக்களுக்கும் நலன்களை வழங்கும் நோக்கில் புகையிரதம் பயணிக்கும் சரியான இடத்தையும் வேகத்தையும் வரைபடம் மூலம் சிறப்பாக அவதானிக்கும் ஆற்றலுடனான உலகளாவிய அமைவிட முறைமையின் மீது அடிப்படையாகக் கொண்ட புகையிரத தொழிற்பாட்டு தகவல் முறைமையொன்றை பாதுகாப்பு அமைச்சினால் கொள்வனவு செய்து தற்போது பயன்படுத்தப்படுகின்ற புகையிரத நேர அட்டவணை முறைமையுடன் இணைத்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.