• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பழக்கப்படுத்திய யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
- வனவுயிர் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வனசீவராசிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு வருடாந்தம் பெற்றுக் கொள்ளப்படும் உரிமப்பத்திரமொன்றின் கீழ் பழக்கப்படுத்திய யானைகளை தங்களுடைய கட்டுக்காப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆட்களுக்கு சட்டபூர்வமாக இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த யானைகளை வைத்திருக்கும் இடங்களை பேணவேண்டிய வழிமுறை, இந்த யானைகளின் சுகாதார நிலையை சிறப்பாக பேணுதல், உரிமையாளர்களினதும் காப்பாளர்களினதும் பொறுப்பு, பதிவு செய்யப்பட்டுள்ள பெண் யானைகளுக்குப் பிறக்கும் யானைக் குட்டிகளைப் பாதுகாத்தல், யானைகளை வேலைகளுக்குப் பயன்படுத்துதல், இனவிருத்தி, பெரஹரா மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக பயன்படுத்துதல், யானைகளுக்கு ஆடைகளை அணிவித்தல் போன்ற விடயங்களை முறைப்படுத்துவதன் மூலம் பதிவு செய்யப்பட்ட யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டின் பொருட்டு வனவுயிர் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வகுத்தமைக்கப்பட்டுள்ள கட்டளைகளை பிரகடனப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.