• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாம் பகுதிக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரை சேவையைப் பெற்றுக் கொள்ளல்
- மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான 39.29 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இரண்டாம் பகுதிக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரை சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.