• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகால தேசிய கடற்றொழில் கொள்கையொன்றையும் செயற்பாட்டுத் திட்டமொன்றையும் தயாரித்தல்
- இலங்கையில் கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக தேசிய கடற்றொழில் கொள்கையொன்றையும் செயற்பாட்டுத் திட்டமொன்றையும் தயாரித்தல் இலங்கை கடற்றொழில் உத்தியோகத்தர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துதல் இலங்கையில் கடற்றொழில் மற்றும் கடல் உயிரின வளர்ப்பு துறைக்கு நோர்வே அரசாங்கத்தின் முதலீடுகள் பெற்றுக் கொள்வதனை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு மூன்று (03) வருட கால கருத்திட்டமொன்றை நோர்வே அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பின் கீழ் நடைமுறைபடுத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.