• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடல்சார் மீன்கள் / மெல்லுடலிகள் சினையூட்டல் ஆராய்ச்சிகளுக்கான நிலையமொன்றைத் தாபித்தல்
- உள்நாட்டு வெளிநாட்டு சந்தையில் உயர் கேள்வி நிலவும் நண்டு, கடல் அட்டை, மட்டி, கடல்சார் மீன்கள் மற்றும் மெல் உடலிகள் சினையூட்டல் மற்றும் அத்தகைய மீன் இனங்களை வர்த்தக ரீதியில் வளர்க்கும் தொழினுட்பத்தை விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான சினையூட்டல் நிலையமொன்றைத் தாபிப்பதற்காக கல்பிட்டிய கந்தக்குளிய பிரதேசத்தில் அமைந்துள்ள 05 ஏக்கர் காணித் துண்டொன்றை தேசிய நீர் வளங்கள் ஆராய்ச்சி, மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கு குறித்தொதுக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.