• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோய்எதிர்ப்பு சக்தி குறைவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- நோய்எதிர்ப்பு சக்தி குறைவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊசி மூலம் வழங்கப்படும் Human Immunoglobulin BP 5-6g புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.