• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை புதுப்பித்தல்
- இலங்கையில் சகல பிரதேசங்களிலிருந்தும் வரும் பல்வேறுபட்ட உட்சிக்கல் நிலைமைவாய்ந்த இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் மூலம் மகத்தான பணி நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்த இருதய நோய் பிரிவு பேணப்பட்டுவரும் கட்டடத் தொகுதி சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் இந்தக் கட்டடத் தொகுதியை நவீன மயப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நவீனமயப்படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இருதய நோய் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரிப்புகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, இருதய நோயாளிகளுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் விதத்தில் இந்த பிரிவுக்கு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் முறைமையொன்றை புதிதாகப் பொருத்துவதற்கும் கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஏனைய திருத்த வேலைகளை உள்ளடக்கியும் 186.32 மில்லியன் ரூபா திருத்தப்பட்ட செலவு மதிப்பீடொன்றின் கீழ் இந்த இருதய நோய் பிரிவை நவீனமயப்படுத்தும் பணிகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.