• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் நிலவும் இடவசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இந்த பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தரம்மிக்க உயர் கல்வியினை வழங்குவதன்பால் அரசாங்கம் உயர்முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகம், வயம்ப மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்கள், அதேபோன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஶ்ரீபாலி வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நிருமாணிக்கும் கருத்திட்டங்களை 2,670 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.