• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டம் - மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- மத்திய அதிவேக பாதையின் இரண்டாம் பகுதியானது மீரிகமயிலிருந்து ஆரம்பித்து குருநாகல் வரை செல்வதோடு, இது 39.29 கி,மீ. தூரத்தைக் கொண்டதாகும். இந்தப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளின் அளவினைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு இது நான்கு சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நான்கு சிவில் வேலை ஒப்பந்தங்களையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.