• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்காக சட்டங்களை ஆக்குதல்
- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் 2011‑03‑17 ஆம் திகதியன்று நடாத்தப்பட வேண்டி இருந்தபோதிலும், பல்வேறுபட்ட காரணங்களினால் இந்த தேர்தலானது பிற்போட நேர்ந்தது. தேர்தல் பிற்போடப்பட்டாலும் அதற்காக முன்வைக்கப்பட்ட நியமனப் பத்திரங்கள் இதுவரை செல்லுபடியாகவுள்ளது. அவ்வாறு நியமனப் பத்திரங்கள் கையளித்தவர்கள் மரணமடைந்திருத்தல், 35 வயதிற்குக் குறைந்த குழுவின்கீழ் போட்டியிடுவதற்காக முன்வந்த அபேட்சகர்கள் வயது 35 ஐ கடந்திருத்தல் போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் இந்த நியமனப் பத்திரங்களை இரத்துச் செய்து மீண்டும் நியமனப் பத்திரங்களைக் கோரும் தேவை எழுந்துள்ளது. அதேபோன்று உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக மேற்போந்த இரண்டு (02) உள்ளூராட்சி நிறுவனங்களினதும் தேர்தல்கள் முன்பு நடைமுறையிலிருந்த வீதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடாத்தப்படுதல் வேண்டும். ஆயினும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லை நிர்ணய பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளமையினால் இந்த இரண்டு (02) உள்ளூராட்சி நிறுவனங்களுக்குமான தேர்தல் தொகுதி முறையை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையின் கீழ் நடாத்துவது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேற்போந்த இரண்டு (02) பிரதேச சபைகளுக்காவும் கோரப்பட்டுள்ள நியமனப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும், புதிய நியமனப்பத்திரங்களை மீளக் கோரி தேர்தலை நடாத்துவதற்கும், தொகுதி முறையினை அடிப்படையாகக் கொண்ட கலப்பு தேர்தல் முறையின் கீழ் இந்த தேர்தலை நடாத்துவதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கிச் சட்டங்களை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.