• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்தை விருத்தி செய்தல்
- இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் சுமார் 270 பரீட்சைகள் ஆண்டொன்றில் நடாத்தப்படுவதோடு, இந்த பரீட்சைகளுக்குத் தேவையான 160 இலட்சத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்கள் அடங்கலாக வேறு ஆவணங்கள் பெருமளவில் இந்த திணைக்களத்திலுள்ள அச்சகத்தின் ஊடாக அச்சிடப்பட்டு வருகின்றது. வினாத்தாள்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்து பிழையின்றி சிறந்த முறையில் அச்சிடுவதற்காக இந்த அச்சகத்தை நவீனமயப்படுத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 530 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அச்சகத்திற்காக டிஜிட்டல் தொழினுட்பத்தைக் கொண்ட அச்சு இயந்திரங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்யும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.