• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு தற்காலிக காப்பு இல்லங்களை நடாத்திச் செல்வதற்கான வழிகாட்டல்கள்
- சில பெண்கள் முகம்கொடுக்கும் வீட்டு வன்முறைகள், கற்பழிக்கப்படுதல், பாலியல் வர்த்தகங்களுக்கு ஆளாதல் போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான சட்ட உதவி, ஆலோசனை, மருத்துவ சேவை என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் தற்காலிக காப்பு நிலையங்களை நடாத்திச் செல்லும் தேவையும் தற்போது உருவாகியுள்ளது. வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட முதலாவது பாதுகாப்பு நிலையமானது 2012 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன்பின்னர் இத்தகைய பாதுகாப்பு நிலையங்கள் சில மாகாண மட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அரசாங்க வைத்தியசாலைகள், பொலிஸ் மற்று அரசசார்பற்ற அமைப்புகள் என்பவற்றின் ஒத்தாசையுடன் தனியார் இடங்களிலும் இத்தகைய பாதுகாப்பு நிலையங்கள் பேணப்பட்டு வருகின்றன. பல்வேறுபட்ட காரணங்களினால் வண்முறைக்கு ஆளாகும் பெண்களுக்காக தற்காலிக பாதுகாப்பினை வழங்கும் நிலையங்களை நடாத்திச் செல்வது சம்பந்தமான வழிகாட்டல்கள் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவையினால் இந்த வழிகாட்டல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.