• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 100 விஹாரைகளை அபிவிருத்தி செய்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த விஹாரைகள் பெரும்பாலானவை குறைந்த வசதிகளுடனான விஹாரைகளாக கருதலாம். இந்த விஹாரைகளில் குடிநீர் வசதிகள் மற்றும் அத்தியாவசிய துப்பரவேற்பாட்டு வசதிகள் குறைந்த மட்டத்தில் நிலவுவதோடு, பங்களிப்பு செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைவாகவுள்ளதன் காரணமாக இத்தகைய வசதிகளை செய்துகொள்வதற்குப் போதுமான பொருளாதாரப் பலம் இந்த விஹாரைகளுக்கு இல்லை. இதற்கமைவாக சீனாவின் குவான்துன் பிரதேசத்தின் பௌத்த சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மிங் ஷின் தேரோ அவர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20.24 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையைப் பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வசதிகளுடன் கூடிய 100 விஹாரைகளின் துப்பரவேற்பாட்டு வசதிகளை (மலசலகூட வசதிகள்) விருத்தி செய்யும் பொருட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.