• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீதுவையிலுள்ள விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
- சீதுவையிலுள்ள விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு பின்வரும் இரண்டு (02) கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* வைத்தியசாலை அலுவலகம் மற்றும் கிளினிக் பிரிவு அமைந்துள்ள கட்டடத்தை 35 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் விரிவுபடுத்தி நவீனமயப்படுத்துதல்;

* அவசர விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ மற்றும் சத்திரகிச்சை காவறைகள், இரண்டாவது கண் நோய் சார்ந்த காவறை, நீரிழிவு நோய் சிகிச்சை நிலையம், தீவிர சிகிச்சைப் பிரிவு, இரசாயனகூடம் மற்றும் ஊடுகதிர்பிடிப்பு பிரிவு, மருத்துவர்களுக்கான அறைகள் அதேபோன்று தாதிமார்களின் விடுதி வசதிகள் என்பவற்றை தாபிக்கக்கூடிய விதத்தில் ஆறு (06) மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை 1,431 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் நிருமாணித்தல்.