• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை / மருத்துவ பிரிவுகளை விருத்தி செய்தல்
- காலி மாவட்டத்திலுள்ள பிரதான மருத்துவமனையான கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மூலம் தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதேபோன்று அண்மைய ஏனைய மாகாணங்களிலிருந்தும் வருகைதரும் நோயாளிகளுக்கும் சுகாதார சேவைகளை வழங்குகின்றது. இந்த மருத்துவமனையில் 1,838 படுக்கைகளும் 60 காவறைகளும் உள்ளதோடு, இங்கு செயற்படுத்தப்பட்டுள்ள நிபுணத்துவ சேவைப் பிரிவுகளின் எண்ணிக்கை 24 ஆகும். இந்த மருத்துவமனையி லிருந்து சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதேபோன்று செய்யப்படும் சத்திரசிகிச்சைகளின் அளவுகளும் கடந்த சில ஆண்டுகளினுள் துரிதமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனையின் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கையை 300 ஆல் அதிகரிப்பதற்கும் வாரமொன்றில் மேலதிகமாக 130 சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் எலும்பு முறிவு சிகிச்சைக் காவறையொன்று, பிளாஸ்ரிக் அறுவைச்சிகிச்சை மற்றும் தீக்காயங்கள் பிரிவொன்று, காது - மூக்கு - தொண்டை சிகிச்சை பிரிவுகள் இரண்டு (02), இரைப்பை குடல்சார்ந்த மற்றும் பேறு - சிறுநீர் உறுப்புகள் சத்திரசிகிச்சை பிரிவொன்று, வாதநோய் பிரிவொன்று, கண்விழி - பின்புறத்திரை சத்திரகிச்சை பிரிவொன்று ஆகியவற்றை தாபிப்பதற்கும் சிறுவர் இதயநோய், சிறுநீரக மற்றும் கண்நோய் தொடர்பில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான வசதிகளுடன் பத்து (10) மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை 1,401.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் கராபிட்டிய போதானா வைத்தியசாலையில் நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.