• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் சூடானுக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
- இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் சூடான் (வடக்கு சூடான்) குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.