• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கான மேலதிக நிதியிடல்
- மொறகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் கன மீற்றர் நீரை விடுவிக்கும் அத்துடன் 3,000 ஹெக்டயர்கள் கொண்ட புதிய நீர்ப்பாசன பிரதேசமொன்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டுவரும் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிருமாணிப்புப் பணிகள் 2018 ஆம் ஆண்டிறுதியில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. முன்னர் இனங்காணப்படாத புவியியல்சார்ந்த நிலைமைகள் காரணமாக இந்தக் கருத்திட்டத்தின் விடயநோக்கெல்லை மாற்றமடைந்துள்ளதோடு, இதற்கமைவாக அதன் ஒப்பந்த செலவானது திருத்தப்பட்டுள்ளது. இந்த மேலதிக நிதித் தேவையிலிருந்து ஒரு பகுதியைப் பெற்றுக் கொள்வதற்காக சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கும் உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.