• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டு உரிமை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொதுத் திறைசேரியில் விசேட செயற்பாட்டு பிரிவொன்றைத் தாபித்தல்
- குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 120,000 வீடுகளும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500,000 வீடுகளுமாக மொத்தம் 620,000 வீடுகள் 2019 ஆம் ஆண்டளவில் நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேசிய ரீதியில் முன்னுரிமையளித்து அதற்குத் தேவையான அங்கீகாரங்களைத் துரிதமாகப் பெற்றுக் கொள்தல், உரிய காணிகளை குறித்தொதுக்கிக் கொள்ளல் மற்றும் கருத்திட்டத்தை உரிய காலக்கட்டமைப்பிற்குள் நிறைவேற்றுதல் என்பவற்றிற்குத் வசதிகளை செய்யும் நோக்கில் பொதுத் திறைசேரியில் விசேட செயற்பாட்டு பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.