• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச மருந்துப்பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தி ஆற்றலை விருத்தி செய்தல்
- உயர் தரம் வாய்ந்த மருந்துகள் கூடிய அளவுகளிலும் குறைந்த விலைகளிலும் குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல மருத்துவமனைகளுக்கு வழங்கும் பொருட்டும் கணிசமான அளவு அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்குமாக அரச மருந்துப்பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தி ஆற்றலை விருத்தி செய்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, இந்த கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி ஆற்றலை விருத்தி செய்வதற்கு ஏற்புடைத்தான உட்கட்டமைப்பு வசதிகளையும் நவீன இயந்திர சாதனங்களையும் கொண்ட புதிய மருந்துப் பொருள் உற்பத்திச் சாலையொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் 1,244 மில்லியன் யென்களைக் கொண்ட கடன் வசதியொன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த கருத்திட்டத்திற்குரிய நிருமாணிப்பு ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.