• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகளுடனான ஆறு (06) டீசல் மல்டிபிள் யுனிட்டுக்களை வழங்குதல்
- வினைத்திறன் மிக்க சொகுசு சேவையொன்றை புகையிரத பயணிகளுக்கு வழங்கும் நோக்கில் இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகளுடனான ஆறு (06) டீசல் மல்டிபிள் யுனிட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.