• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை (நிதி நகர கருத்திட்டம்) திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக அங்கீகரித்தல்
- உத்தேச கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (நிதி நகர கருத்திட்டம்) சம்பந்தமாக எழுந்துள்ள உரிய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல், சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பிடல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் திறமுறை அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அங்கீகரிப்பதற்கும் அது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்குமாக திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.