• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹபராதூவ நிலசெவன வீடமைப்புத் திட்டத்தை நவீனமயப்படுத்தல்
- முக்கியமாக அரசாங்க துறையைச் சேர்ந்த ஊழியர்களின்பால் விசேட கவனம் செலுத்தி நியாயமான விலைக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன் "நிலசெவன" வீடமைப்புக் கருத்திட்டம் 2003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்கீழ் காலி மாவட்டத்தின் ஹபராதூவ பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 576 வீட்டு அலகுகளின் நிருமாணிப்பு வேலைகள் 2011 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததோடு, இந்த வீட்டு அலகுகள் அமைந்துள்ள 13 ஏக்கர் விஸ்த்திரணமுடைய காணியும் 09 கட்டடங்களும் பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆதலால், இந்த வீட்டு அலகுகளையும் அவை அமைந்துள்ள மனையிடத்தையும் சகல நவீன பொது வசதிகளுடன் கூடிய விதத்திலும் அதன் பெறுமதி அதிகரிக்கும் விதத்திலும் நவீனமயப்படுத்தி குடியிருப்பு நோக்கங்களுக்காகவும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளுக்காகவும் கலப்பு கருத்திட்டமொன்றாக மீளமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்திலுள்ள வீட்டு அலகுகளில் அத்தகைய ஏதேனும் திட்டவட்டமான அளவினை சலுகை விலைக்கு அரசாங்க ஊழியர்களுக்காக ஒதுக்குவதற்கும் மீதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் இந்த கருத்திட்டத்திற்குரிய பிரதான முத்தரப்பு உடன்படிக்கை சார்பில் குறைநிரப்பு / துணை உடன்படிக்கையொன்றை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கருத்திட்டக் கம்பனி ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத்திடும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.