• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 சர்வதேச வெசாக்தின விழாவுக்கு ஒருங்கிணைவாக சர்வதேச பௌத்த நிலையமொன்றை நிருமாணித்தல்
- 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்படவுள்ள வெசாக்தின விழாவுக்கு ஒருங்கிணைவாக பிலியந்தலையிலுள்ள சமரக்கோனின் பரம்பரை சொத்துக்குரிய கஹபொல ரெஜிடேல்வத்த காணியில் சர்வதேச பௌத்த நிலையமொன்றை நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக புத்தபெருமானின் பிறப்பு நிகழ்ந்த அப்போதைய சாக்கிய குடியேற்றத்தை இந்த காணியினுள் மீள் நிருமாணிக்கப்பட்டு மக்கள் காண்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் முழுமையான பௌத்த நூலகமொன்று, பௌத்த தியான நிலையமொன்று, டிஜிட்டல் தொழினுட்பத்தின் மூலம் புத்தபெருமானின் வாழ்க்கை மற்றும் அது சம்பந்தமான கதைகளை மீள் உருவாக்கும் மற்றும் காட்சிப்படுத்தும் நிலையமொன்று, சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலம் மதம்சார்ந்த விரிவுரைகளை நடாத்துவதற்கு பயிற்சியளிக்கும் நிலையமொன்று, சைவ உணவக மொன்று, மதகுருமார் - பொது மக்கள் ஓய்வு விடுதியொன்று போன்ற பிரிவுகளும் கட்டியெழுப்பப்படவுள்ளது. இந்தக் கருத்திட்டம் இலாபமீட்டாத நிறுவனமொன்றான “Light of Asia Foundation” நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.