• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு கோட்டை / புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
- மேற்குப் பிராந்திய மாநகரத்திற்கான விரிவான முகாமைத்துவத் திட்டத்தின் கீழான பிரேரிப்புகளில் கொழும்பு கோட்டை / புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபித்தலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பொது மக்களுக்கு வசதியானதும் வினைத்திறன் மிக்கதுமான போக்குவரத்து சேவையொன்றை வழங்கும் நோக்கில் சகல விதமான போக்குவரத்துகளையும் இணைத்து கொழும்பு கோட்டை / புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலையமொன்றைத் தாபிக்கும் பிரேரிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.