• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபோஷ உற்பத்திக்காக சோயா அவரை கொள்வனவு செய்தல்
- சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது:

* தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் சோயா அவரை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள 5,000 மெ.தொ சோயா அவரையை நேரடியாக திரிபோஷா கம்பனிக்கு வழங்குவதற்கும்;

* எதிர்காலத்தில் தேசிய திரிபோஷா நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான சோயா அவரையை, சோயா அவரை உற்பத்தி செய்யும் விவசாயிகளை உள்ளடக்கிய பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளிடமிருந்து விலைகோரி கொள்வனவு செய்வதற்கும்.