• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் செயற்பாடுகளின் ஆய்வு - 2015/2016
- சர்வதேச தொழில் அமைப்பினால் வழங்கப்படும் நன்கொடைகளைப் பயன்படுத்தி தொகை மதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் சிறுவர் செயற்பாடுகள் பற்றிய ஆய்வொன்று 2015 - 2016 காலப் பகுதிக்குள் நடாத்தப்பட்டுள்ளதோடு, அதன் தரவுகள் தயாரிக்கப்பட்டு தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக இந்த ஆய்வின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கும் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தரவுகள் தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் அறியச் செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்று சர்வதேச தொழில் அமைப்பினால் வழங்கப்படும் மேலதிக 4.35 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.