• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பல் விபத்துக்கள் காரணமாக கடலில் எண்ணெய் கசிவதன் சார்பில் சர்வதேச சட்டத்தின் கீழ் நட்டஈடு பெற்றுக் கொள்ளல்
- கப்பலின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொருட்கள் கொண்டு செல்லல் அதிகரித்துள்ளதன் காரணமாக கப்பல்கள் விபத்துக்கு ஆளாகி கப்பலில் எரிபொருளாக கொண்டு செல்லப்படும் எண்ணெய் (கப்பல் எண்ணெய்) கசிவதனால் பாதிக்கப்படும் தரப்புக்கு போதுமான மற்றும் துரிதமாக நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கும் கடல்சார்ந்த கைத்தொழில்களுக்கு இதன்மூலம் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்குமாக 2008 ஆம் ஆண்டிலிருந்து வலுவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கப்பல் எண்ணெய் அனர்த்தத்தின் மூலம் ஏற்படும் சேதங்கள் தொடர்பிலான சிவில் சமூகத்தின் பொறுப்புக்கள் பற்றிய சர்வதேச சமவாயத்தில் 80 நாடுகள் தற்போது உறுப்புரிமை கொண்டுள்ளன. இலங்கையிலுள்ள துறைமுகங்களுக்கு ஆண்டொன்றில் சுமார் 5,000 கப்பல்கள் வருகின்றமையினாலும் இலங்கைக்குச் சொந்தமான கடல்வலயத்தின் ஊடாகவுள்ள கப்பல் பாதை மூலம் நாளொன்றுக்கு பாரிய அளவில் கப்பல்கள் செல்கின்றமையினாலும் இலங்கை கடல்வலயத்தினுள் திடீர் கப்பல் எண்ணெய் கசிவு நிகழும் அச்சுறுத்தல் மிக அதிகமானதாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் கடற்றொழில், சுற்றுலாத்துறை மற்றும் கடல்சார்ந்த ஏனைய கைத்தொழில்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்வதற்கும் சேதங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் துரிதமாக நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கும் இந்த சமவாயத்தில் கைச்சாத்திடுவது பொருத்தமானதாகும். இதற்கமைவாக கப்பல் எண்ணெய் அனர்த்தங்களின் மூலம் நிகழும் சேதங்களுக்கான சிவில் சமூகத்தின் பொறுப்புப் பற்றிய சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசடைதலைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துவதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.