• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் (2016-2018) கீழ் தரம் மிக்க உணவு நுகர்வினை ஊக்குவித்தல்
- இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பயிர்செய்யப்படும் உணவுப் பொருட்களின் பாவனையினால் தொற்றாத நோய்களுக்கு மக்கள் பெருமளவில் ஆளாகின்றமை ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, தரம் மிக்க உணவு நுகர்வு முறையொன்றுக்கு அவர்களைப் பழக்கப்படுத்துவது அத்தியாவசிய விடயமொன்றாக காணப்படுகின்றது. ஆதலால், தற்போது அரசாங்கத்தின் முன்னுரிமை கவனம் செலுத்தப்பட்டுள்ள "உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அங்கமொன்றாக இரசாயனக் கலவையற்ற தரம் மிக்க உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினையானது தரம் மிக்க உணவுப் பயிர் செய்கைக்குத் தேவையான விதைகள் போதுமான அளவு இல்லாமையாகும்.

இதற்கமைவாக, தரம் மிக்க விதை நெல்லை அதிகரித்தல் மற்றும் விரிவாக்கத்திற்காக 2016 / 2017 பெரும்போகத்தின் போது பாரம்பரிய விதை நெல் குறிப்பிட்ட அளவு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கும் நோக்கில் தற்போது பாரம்பரிய நெல்வகைகள் செய்கைபண்ணப்பட்டுள்ள விளைச்சல் நிலங்களிலிருந்து பொருத்தமான விதை நெல் 400,000 கிலோகிராம் கமத்தொழில் திணைக்களத்தினதும் கமநல சேவைகள் திணைக்களத்தினதும் ஒத்தாசையுடன் கொள்வனவு செய்து அவற்றை உரிய அதிகாரபீடங்களின் ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்படும் விவசாயிகளிடத்தில் பகிர்ந்தளிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான தொழினுட்ப உதவிகளை வழங்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.