• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் அடிப்படையிலான கைத்தொழில்கள் மற்றும் கமத்தொழில் உற்பத்தி விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டம்
- இரஜரட்டையை எழுச்சிபெறச் செய்தல் சனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் "பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்" பல் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள துறைகளிலிருந்து விவசாய விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை தாபிப்பதற்கும் கமத்தொழில் பொருளாதார சந்தையொன்றை நிருமாணிப்பதற்காக முன்னுரிமை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக கமத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள் மற்றும் கமத்தொழில் உற்பத்தி விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கு சீன அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.