• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அஹங்கம தொழிற்பயிற்சி நிலையத்தை நிருமாணித்தல்
- இந்த நாட்டில் தொழினுட்பத் துறையில் நிலவும் கேள்விக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சி நிலைய வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் "ஆற்றல் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (2014 - 2020)” என்பதன் கீழ் தொழிற்பயிற்சி நிலையமொன்றை அஹங்கம பிரதேசத்தில் நிருமாணிப்பதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த தொழிற்பயிற்சி நிலையங்களை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.