• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் களஞ்சியசாலைத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- இரத்தினபுரி மாவட்ட விவசாயிகளுக்கு அவர்களுடைய கமத்தொழில் அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக தரத்தில் உயர்ந்த களஞ்சிய வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஆய்வுகூடமொன்றுடனான அலுவலக கட்டடமொன்று, தங்குமிட வசதிகளுடனான கட்டடமொன்று, நீர் தாங்கியொன்று, டிரான்ஸ்போமர் அறையொன்று ஆகியவற்றைக் கொண்ட அண்ணளவாக 28,500 சதுர அடி அளவுடைய களஞ்சியசாலை தொகுதியொன்றை எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.