• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற சபை கூடத்தில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மூடிய சுற்று தொலைக் காட்சி முறைமைக்குப் (CCTV) பதிலாக புதிய முறைமை யொன்றைப் பொருத்துதல்
- பாராளுமன்றத்தில் தற்போதுள்ள ஒலிமுறைமை, மூடிய சுற்று தொலைக்காட்சி முறைமை, பிரதான மணிக்கூட்டு முறைமை மற்றும் தொலைபேசி பரிமாற்றலுக்குப் பதிலாக புதிய முறைமையை பொருத்துதல் என்பன சார்பில் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பாராளுமன்றத்தில் தற்போதுள்ள மூடிய சுற்று தொலைக்காட்சி முறைமை சார்பில் டிஜிட்டல் தொலைக்காட்சி முறைமையொன்றை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.