• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடநூல்களை முன்னோடி செயற்திட்டமொன்றாக நீண்டகாலப் பாவனை கொண்ட செயற்கைக் காகிதத்தில் அச்சிடுவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- பாடநூல்கள் இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் சுமார் 3,500 மில்லியன் செலவு செய்யப்படுகின்றது. இந்த செலவை குறைப்பதற்காக பாடநூல்களின் மீள் பாவனையை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப் பட்டாலும் பாடநூல் ஒன்று மூன்று (03) வருடங்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாதுள்ளமை காணக்கிடைத்துள்ளது. இதற்கமைவாக பாடநூல்களில் சுமார் 70 சதவீதம் வருடாந்தம் புதிதாக அச்சிட்டு விநியோகிக்கப்படுகின்றதோடு, இதற்காக கூடிய செலவினை ஏற்கவேண்டியும் உள்ளது. ஆதலால், மாணவர்களுக்கு இலகுவாக பரிசீலனை செய்வதற்கு இயலுமாகும் வகையிலும் இயற்கை அனர்த்தங்கள் மூலம் சேதமடையாத, பேனை கீறல்கள், பென்சில் கீறல்கள் போன்ற இலகுவாக அப்புறப்படுத்தக்கூடிய மிக உயர்ந்த வடிவம் கொண்ட செயற்கை கடதாசியைப் பயன்படுத்தி பாடசாலை புத்தகங்களின் சில வகைகளை அச்சிடுவதற்கான முன்னோடிக் கருத்திட்டமொன்று 2017 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.