• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்யும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
- முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த வயதெல்லை மற்றும் இந்த சட்டத்தின் கீழ் தழுவப்படும் பிற விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள் இலங்கையும் ஒரு தரப்பாகவுள்ள சில சருவதேச நியதிச்சட்டங்களில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுடன் ஒவ்வாமல் இருப்பதனால், இந்த ஏற்பாடுகளை திருத்துவது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இது சம்பந்தமாக பரிசீலனை செய்து முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு செய்யப்பட வேண்டிய பொருத்தமான திருத்தங்கள் பற்றி அமைச்சரவைக்கு பிரேரிப்புகளைச் செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.