• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மெதிரிகிரிய ஆயுள்வேத மருத்துவமனை கட்டடங்களின் நிருமாணிப்பு
- பொலன்நறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மெதிரிகிரிய ஆயுள்வேத மத்திய மருந்தகத்திலிருந்து நாளாந்தம் சுமார் 90 நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த பிரதேசத்தில் பரவலாக காணப்படும் நீண்டகால சிறுநீரக நோய் சார்பிலும் அதேபோன்று பிற தொற்றாத நோய்கள் சார்பிலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் ஆயுள்வேத சிகிச்சையை வழங்குவதன் மூலமும் வெற்றிகரமான பெறுபேற்றினை அடையமுடியுமென தெரியவந்துள்ளது. இதற்கமைவாக மெதிரிகிரிய மற்றும் அதற்கண்மையில் அமைந்துள்ள ஹிங்குரக்கொட, லங்காபுர மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தங்கியிருந்து ஆயுள்வேத மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் மெதிரிகிரிய ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை ஆயுள்வேத மருத்துவமனையொன்றாக மேம்படுத்துவதற்குத் தேவையான கட்டடங்களை 37 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.