• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
- இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டினை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதோடு, அதற்காக புதிய சட்டங்களை வரைவது அத்தியாவசியமானதென தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் துரித பொருளாதார அபிவிருத்திக்கு உரியதாகும் சகல விடயங்கள் தொடர்பிலும் தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கு வசதிகளை செய்யும் பொருட்டும் பொருளாதார அபிவிருத்தி, அபிவிருத்தி முகவர் நிறுவனங்களைத் தாபித்தல் கிராமிய நவீனமயப்படுத்தல் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற விடயங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டும் தயாரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.