• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்க வலையமைப்பு 2.0 கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்துகை
- அரசாங்க நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலும் அரசாங்க நிறுவனங்களுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் இடையிலும் டிஜிட்டல் முறையில் தொடர்புகளை பேணுவதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மையினால் 2007-2012 காலப்பகுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க வலையமைப்பு கருத்திட்டத்தின் (Lanka Governmet Network - LGN) கீழ் வழங்கப்பட்டுள்ள தரவு அனுப்பீட்டு வேகம் குறைவடைந்துள்ளமை அரசாங்கத்தின் நோக்கத்தை அடைவதற்குள்ள பிரதான தடையாகவுள்ளது. இதற்கமைவாக e அரசாங்க பணிகளுக்குத் தேவையான அதிவேக மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் உட்பட இலவச wifi சேவையை வழங்குவதனை குறியிலக்காகக் கொண்டு இலங்கை வலையமைப்பு - 2 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.