• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 20 கொள்கலன்களை கொண்டு செல்லும் வெகன்களையும் 30 எரிபொருள் தாங்கி வெகன்களையும் கொள்வனவு செய்தல்
- இந்திய கடன்வழியின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 20 கொள்கலன்களை கொண்டு செல்லும் வெகன்களையும் 30 எரிபொருள் தாங்கி வெகன்களையும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.