• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் றேடியல் மற்றும் திண்ம டயர் தொழிற்சாலையொன்றை நிருமாணித்தல்
- நான்கு வருடங்களுள் 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மூலதன முதலீடொன்றை பயன்படுத்தி 1,000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் மொத்த உற்பத்தியின் 60 சதவீதம் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு றேடியல் மற்றும் திண்ம டயர் உற்பத்தி தொழிற்சாலையொன்றை ஹொரண பிரதேசத்தில் தாபிப்பதற்கு முன்வரும் முதலீட்டாளர் ஒருவருக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.