• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- சுகததாச உள்ளக விளையாட்டு மைதானம், சுகததாச திறந்த விளையாட்டு மைதானம், சுகததாச நீச்சல் தடாகத்தொகுதி, கண்டி போகம்பர திறந்த மைதானம், நுவரெலிய குதிரை ஓட்டப்போட்டி மைதானம், பெலியத்தை நீச்சல்தடாகத் தொகுதியின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு பணிகள் சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபைினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அதிகாரசபையினால் விளையாட்டு வசதிகள் மிக சலுகை விலையின் கீழ் வழங்கப்படுவதோடு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் உரிய விளையாட்டு மைதானங்களை முறையாக பராமரிப்பதற்கு போதுமானதாக இல்லை. இதற்கமைவாக, விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கும் விளையாட்டு வசதிகளை வழங்குவதற்கு போதுமான வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உரிய மைதானங்களை விளையாட்டு போட்டிகளுக்காக பயன்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் கலை நிகழ்ச்சிகள், சம்மேளனங்கள், பரீட்சைகள் போன்ற வருமானம் கிடைக்கக்கூடிய பணிகளுக்காக பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கிலும் இந்த சட்டத்திற்கு நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தங்களைச் சேர்த்து 1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தை திருத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.