• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒழுங்குறுத்துகை விடயநோக்கெல்லைக்குள் கொண்டு வரும் முக்கியத்துவம் அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விற்பனை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாதவாறு, இந்த நோக்கத்திற்காக 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்தும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.