• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்கள் குடும்பத் தலைவிகளாகவுள்ள குடும்பங்களுக்கான தேசிய திட்டம்
- இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதம் பெண்களை கொண்டுள்ளதோடு, பெண்கள் குடும்பத் தலைவிகளாகவுள்ள நாட்டின் மொத்த குடும்ப எண்ணிக்கையில் 24.3 சதவீதமான குடும்பங்களுக்கு முக்கிய கவனம் செலுத்துவது அத்தியாவசியமானதாகும். அபிவிருத்தி செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் "பெண்கள் குடும்பத் தலைவிகளாகவுள்ள குடும்பங்கள்“ சார்பில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டிய கூட்டு அணுகல் திட்டமிட்டு வருகின்றதோடு, அதன்கீழ் தயாரிக்கப்பட்ட தேசிய ரீதியில் ஆரம்பகட்டமான பிரேரிப்பு சுகாதாரம் மற்றும் மனநிலை - சமூக ஒத்துழைப்பு, வாழ்வாதார அபிவிருத்தி, உதவிச் சேவை முறைமை, பாதுகாப்பு, சமூகபாதுகாப்பு, தேசியமட்டக் கொள்கை வகுப்பு மற்றும் சமூக அறிவூட்டல் போன்ற பல துறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.