• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
- அரசாங்க மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த நடுத்தர வருமானம் பெறும் ஊழி்யர்களுக்காக அவர்களுக்கு கட்டுப்படியான விலையில் வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் 500,000 வீட்டு அலகுகள் நிருமாணிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக தாபிக்கப்பட்ட தேசிய வழிப்படுத்தல் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 332 வீட்டு அலகுககளைக் கொண்ட குண்டசாலை ஸ்காகாரவத்தை வீடமைப்பு திட்டத்தினதும் 860 வீடுகளைக் கொண்ட ஹோமாகம மவுண்ட் கிளிபர்ட் வீடமைப்புத் திட்டத்தினதும் நிருமாணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.