• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எல்பிட்டியவில் பெறுமதிசேர் செயற்பாட்டு வலயமொன்றை ஆரம்பித்தல்
- நாடுமுழுவதும் 23 கமத்தொழில் உயர் வலயங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒருங்கிணைவாக பெறுமதிசேர்க்கப்பட்ட செயற்பாட்டு வலயமொன்றை காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்தின் உற்பத்திகளுக்கு உயர் ஏற்றுமதி வருமானம் உரியதாவதோடு, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் உருவாகும். இதற்கமைவாக, உத்தேச எல்பிட்டிய கமத்தொழில் செயற்பாட்டு வலயமொன்றை ஆரம்பிப்பதற்காக தெற்கு அதிவேகப் பாதைக்கு அண்மையில் அமைந்துள்ள எல்பிட்டிய பிளான்டேஷன் கம்பனிக்குச் சொந்தமான இகல்கந்த மற்றும் கெட்டப்பலவத்த பிரதேசங்களிலிருந்து 200 ஏக்கரை குறித்தொதுக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினாலும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.