• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொனராகலை மாவட்ட விளையாட்டு கட்டடத்தொகுதி மற்றும் மொனராகலை உள்ளக விளையாட்டு மைதானம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக காணியொன்றை பெற்றுக்கொள்தல்
- மொனராகலை மாவட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதேபோன்று எதிர்கால சந்ததியினரின் விளையாட்டுத் திறன்களை நாட்டிற்கு வழங்குவதற்கு பாரிய வசதியினை வழங்கி உத்தேச மொனராகலை மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதியையும் உள்ளக விளையாட்டு மைதானத்தையும் நிருமாணிப்பதற்காக மக்கள்தோட்ட அபிவிருத்தி சபையினால் பயன்படுத்தப்படும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனராகலை குமாரவத்தை தோட்டத்திலிருந்து 10 ஏக்கர் காணித் துண்டொன்றை குறித்தொதுக்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.