• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் கால்நடைவள துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
- உள்நாட்டு கேள்வியினை பூர்த்தி செய்து வெளிநாட்டு சந்தையை வெற்றி கொண்டு இலங்கை கால்நடைவளத்தின் உற்பத்திதுறையை விருத்தி செய்யும் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உணவு தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதற்கும் இந்த திணைக்களத்திற்குச் சொந்தமான நோய்தடுப்பு நிலையத்தை நவீனமயப்படுத்து வதற்கும் விசர்நாய் கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் பல்துறை பிரிவுகளைத் தாபிப்பதற்கும் பல்வேறுபட்ட மிருகங்களிலிருந்து தொற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குமாக 1,402 மில்லியன் ரூபாவைக் கொண்ட திறைசேரி நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.